- செய்திகள், மாவட்டச்செய்திகள், வணிகம்

பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை…

சென்னை, மே 2:-

தங்கத்தின் விலை  தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று  ரூ.23 ஆயிரத்தை தாண்டியது.

தேவை

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது தங்கத்தின் விலை. இந்த நிலையில், கல்யாண சீசன், பண்டிகை காலம் காரணமாக தேவை அதிகரித்ததால் கடந்த புதன்கிழமை முதல் தங்கத்தின் விலை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் போல் விலை மளமளவென உயர்ந்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில்  மட்டும் தங்கம் பவுனுக்கு 872 ரூபாய் உயர்ந்தது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 2 ஆயிரத்து 876 ரூபாயாக உயர்ந்தது. நேற்று கடந்த சனிக்கிழமையன்று இது 2 ஆயிரத்து 870 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 48 ரூபாய் ஏற்றம் கண்டு 23 ஆயிரத்து 8 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் இது 22 ஆயிரத்து 960 ரூபாயாக இருந்தது.

வெள்ளி

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், நேற்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 45 ரூபாய் 50 காசுகளாகவும், கிலோவுக்கு  48 ரூபாய் உயர்ந்து 42 ஆயிரத்து 525 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.

நாள்                            விலை உயர்வு (ரூபாயில்)
2016 ஏப்ரல் 27                     128
ஏப்ரல் 28                            176
ஏப்ரல் 29                            272
ஏப்ரல் 30                            248
மே 2                                   48

மொத்தம்                            872

Leave a Reply