- செய்திகள், மாவட்டச்செய்திகள், வணிகம்

பவுனுக்கு 296 ரூபாய் குறைந்தது தங்கம் விலையில் தொடர் சரிவு…

சென்னை, ஏப்.24:-
தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து குறைந்துள்ளது. தங்கம் பவுனுக்கு 296 ரூபாய் வீழ்ச்சி கண்டது.

2 நாட்கள்

இம்மாதம்  தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருந்து வந்தது.  இருப்பினும் கடந்த வியாழக்கிழமை வரையிலான 6 நாட்களாக தங்கத்தின் விலை  தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சரிவு கண்டுள்ளது. தேவை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று   தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 766 ரூபாயாக  சரிந்தது. நேற்று முன்தினம் இது 2 ஆயிரத்து 786 ரூபாயாக இருந்தது.  பவுனுக்கு 160 ரூபாய் சரிந்து 22 ஆயிரத்து 128 ரூபாயாக வீழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது 22 ஆயிரத்து 288 ரூபாயாக இருந்தது.

வெள்ளி

தங்கத்தின் விலை குறைந்துள்ளபோதிலும் வெள்ளியின்  விலையில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளி கிராமுக்கு 44  ரூபாயாகவும், கிலோவுக்கு 41 ஆயிரத்து 155 ரூபாயாகவும்  உள்ளது.

Leave a Reply