- செய்திகள்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.33 கோடி…

 

பழனி, ஜூலை 27-
பழனி முருகன் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் கடந்த ஆண்டு காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.33 கோடி என்று தெரிய வந்துள்ளது.
3-ம் படை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி முருகன் கோவில். இது தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. 12 மாதங்களிலும் பழனி முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகிறார்கள்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களும், கேரள பக்தர்களும் பழனிக்கு வருகை தந்து முருகனை தரிசித்து செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். இவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன் மற்றும் பிரார்த்தனை காணிக்கையாக உண்டியலில் பணம், நகைகள், பொருட்கள் என செலுத்துகிறார்கள்.
ரூ.33 கோடி

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதத்தில் ஒரு நாளும், முக்கிய திருவிழாக்கள் நடக்கும் காலங்களில் மாதத்தில் இரு முறையும் எண்ணப்படுகிறது. கடந்த ஆண்டு (1.7.2015 முதல் 30.6.2016 வரை) மட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது மொத்தம் ரூ.33 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரத்து 838 ஆகும். பணம் தவிர தங்கம், வெள்ளி, நகைகளும், கோவில் கடைகள் ஏலம் மூலமும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய முடி மூலமும், இதர வருமானங்களும் பல கோடி என்று கோவில் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply