- செய்திகள்

பள்ளி மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது திருவண்ணாமலை அருகே…

திருவண்ணாமலை, ஜுலை 27-
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அந்த மாணவி பள்ளிக்குச் சென்றபோது அவ்வழியாக வந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜய் (19)என்பவர், அந்த மாணவியை கேலி -கிண்டல் செய்துள்ளார்.

மேலும் அன்று மாலை பள்ளிமுடிந்து வீடு திரும்பிய மாணவியை வழிமறித்த விஜய் அவரை ஆபாசமாக பேசியதோடு தன்னிடம் பேசும்படி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செங்கம் மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி விஜயை கைது செய்தனர்.

Leave a Reply