- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை,டிச.15:-
மதுரை போலீஸ் கண்ட்ரோல் ரூம் போலீசாருக்கு நேற்று காலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர், மதுரை அண்ணா நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் எந்தப்பள்ளி, எந்த கல்லூரி என குறிப்பிட்டு கூறவில்லை. இதை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை போலீசார், அண்ணாநகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அண்ணாநகர் பகுதியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், 2 தனியார் கல்லூரி ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்பின் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துப்பறியும் மோப்ப நாய் சோதனை நடத்தப்பட்டது. பகல் வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு தகவல் புரளி என கண்டறியப்பட்டது. இது குறித்து போனில் பேசியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply