- செய்திகள், மாநிலச்செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறியது பெங்களுரு அருகே பெரும் பரபரப்பு

பெங்களூரு, பிப். 8:-

பெங்களூரு அருகே ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குள் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று புகுந்து 2 பேரை கடித்து குதறியது.

கர்நாடாக மாநிலம், பெங்களூருவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் குந்தனஹல்லி எனும் பகுதி உள்ளது. இங்கு விப்ஜியார் எனும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுஅதிகாலை பெரிய பூனை போன்ற ஒரு விலங்கு பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறிச்செல்வதை அந்த பள்ளியின் காவலாளி பார்த்தார். இதையடுத்து, அதன்மீது டார்ச் அடித்து பார்த்தபோது, அது சிறுத்தை என்பதை அறிந்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார்.

அவர்கள் அங்கு விரைந்து வந்து, பள்ளியின் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளிக்குள் பல இடங்களில் அந்த பெரிய சிறுத்தை அங்கும்இங்கும் உலவுவதைக் கண்டு அதிர்ந்தனர். இதையடுத்து, பள்ளிநிர்வாகம் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க பெரிய கூண்டு, மயக்கமருந்து ஊசி , துப்பாக்கி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வந்தனர். சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த செய்தி அறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடினர்.

பள்ளியில் சிறுத்தை நடமாடும் இடத்தில் கூண்டு வைத்து சிறுத்தையை வெளியே கொண்டுவர பட்டாசுவெடித்தும்,  மேளம் அடித்தும், ஒலிஎழுப்பியும் விரட்டினர். அப்போது அந்த சிறுத்தை பள்ளியின் சுற்றுச்சுவர் மேல் ஏறி, பள்ளியின் நீச்சல் குளத்துக்கு வந்தது.

அப்போது அந்த சிறுத்தையை புகைப்படம் எடுக்க வனத்துறை சார்பில் புகைப்படக்காரர் சஞ்சய் குபி என்பவர் வந்திருந்தார். அப்போது அந்த சிறுத்தையை புகைப்படம் எடுக்க முயன்றபோது அந்தசிறுத்தை அவரின் கையைக் கடித்தது. உடனே அவர் சுதாரித்து, சிறுத்தை, எட்டி உதைத்தார் மேலும், அங்கிருந்த பலர் கம்பு, கட்டைகளை வீசவே சிறுத்தை பயந்து மீண்டும் வெளியே ஓடி, வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி, மற்றொருவரை கடித்துவிட்டு தப்பி ஓடியது. இதுபோல் நீண்ட நேரம் சிக்காமல் ஓடிய சிறுத்தை மாலை 6 மணிக்கு வனத்துறையினர் மயக்கமருந்து செலுத்தி கூண்டில் பிடித்துச் சென்றனர். சிறுத்தையை பிடிக்க முயன்ற முயற்சியில் இருவர் காயமடைந்தனர்.

Leave a Reply