- செய்திகள், விளையாட்டு

பளு தூக்கும் போட்டி: 15 விளையாட்டில் இந்தியாவுக்கு 13 தங்கம்

 

பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 13 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். மொத்தம் 15 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ஆடவர் பிரிவில் நடைபெற்ற 8 போட்டிகளில் இந்திய ஆடவர்கள் 6 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற மகளிருக்கான 75 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவுப் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷீலா பன்வர் தங்கம் வென்றார். இவர் மொத்தம் 198 கிலோ தூக்கினார். இலங்கையின் இஷானி அன்னுஷ்கா கலுதந்திரி 173 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.  நேபாளத்தின் தாரா தேவி பன் மொத்தம் 165 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார்.

ஆடவர் 105 கிலோவுக்கு மேல்பட்ட பிரிவில் இந்தியாவின் குர்தீப் சிங் இரண்டாம் இடம் பிடித்தார், இவர் 345 கிலோ தூக்கினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் முகமது நூ தஸ்கதீர் பட் 360 கிலோ தூக்கி தங்கம் வென்றார்.  இலங்கையின் சமன் கேதாரா மொத்தம் 275 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார்.

Leave a Reply