- செய்திகள்

பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே ஏற்பாடு…

சென்னை, ஆக. 26-
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பரடு செய்து உள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்டிரல்-திவிம்

சென்னை சென்டிரல்-திவிம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06021) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, 28-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சென்றடையும். (இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனூர் சந்திப்பு, திரூர், கோழிக்கோடு, படகரா, தலைச்சேரி, கண்ணுர், பையனூர், கான்கான்கட், காசர்கோடு, மங்களூர் சந்திப்பு, உடுப்பி, கார்வார், கனகோனா மாட்கோன் மற்றும் கர்மாலி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).
திவிம்-வேளாங்கண்ணி
திவிம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06022) 28-ந் தேதி காலை 7.40 மணிக்கு திவிம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்று சேரும். (இந்த ரெயில் கார்மலி, மட்கோன், கனாகோனா, கார்வர், உடுப்பி, மங்களூர் சந்திப்பு, கண்ணூர், கோழிக்கோடு, ஷோரனூர் சந்திப்பு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை).
வேளாங்கண்ணி-சென்னை
வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06014) வேளாங்கண்ணியில் இருந்து 29-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி
வாஸ்கோடகாமா/சாவந்வாடி ரோடு- வேளாங்கண்ணிக்கு (வண்டி எண் 82655)வாஸ்கோடகாமாவில் இருந்து நாளை (27.8.2016) மற்றும் 3.9.2016 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 28 மற்றும் 4-ந் தேதிகளில் பகல் 12.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். (இந்த இரு ரெயில்களும் மாட்கோன், கார்வர், கும்டா, பாட்கை, குந்தபுரா, உடுப்பி., சரட்கல், மங்களூர் சந்திப்பு, காசர்கோடு, கண்ணூர், தலைச்சேரி, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).
வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா

வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில்  (வண்டி எண் 82656) 30-ந் தேதி காலை 10.40 மணிக்கும், 31-ந் தேதி காலை 10 மணிக்கும் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படுகின்றன.
வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண் 82660) அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் ்தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 6-ந் தேதி காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண்82657) வாஸ்கோடகாமாவில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, 8-ந் தேதி மதியம் 12.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண் 82658) அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 9.10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு நடப்பில் உள்ளது.
இவ்வாறு தெற்கு ரெயில்ேவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply