- செய்திகள்

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ஜெயலலிதா உத்தரவு…

சென்னை, ஆக. 17-
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவல் துறையினர் உள்பட 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆய்வாளர் முத்துலட்சுமி
27.4.2016 அன்று சென்னை பெருநகர காவல் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த எம்.பழனி; 28.4.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப் பணி புரிந்த முத்துலட்சுமி; 3.5.2016 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ஜி.பெர்னாண்டஸ்; 4.5.2016 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பி.ஜான்சன்; 14.5.2016 அன்று கோயம்புத்தூர் மாநகரம், பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஆர்.பாண்டியன்;
முதல்நிலை காவலர்
15.5.2016 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரம், உறையூர் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ஆர்.ராஜசேகர்; 17.5.2016 திருச்சிராப்பள்ளி மாநகரம், கே.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஏ.சீத்தாராமன்; 18.5.2016 அன்று சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த கே.திருமுருகன்; 20.5.2016 அன்று அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த சி.அமலதாஸ்; 4.6.2016 அன்று திருநெல்வேலி மாவட்டம், சேந்தமரம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த யூசுப் அலி; 7.6.2016 அன்று தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஏ.செந்தில்;
உடல் நலக்குறைவு காரணமாக
18.6.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை – 1, மோட்டார் வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த டி.விஜயகுமார்; 25.6.2016 அன்று தேனி மாவட்ட ஆயுதப் படை, வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஆர்.அம்பேத்கார்; 27.6.2016 அன்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிந்த பாலமுருகன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.
சாலை விபத்தில்

15.5.2016 அன்று சென்னை பெருநகர காவல், பாதுகாப்பு, சென்னை காவல்(செக்யூரிட்டி சென்னை போலீஸ்)பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எம்.பஷீர்; 17.5.2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப் படை மோட்டார் வாகனப் பிரிவில் காவலராகப் பணி புரிந்த ஆர்.செந்தில்குமார்; 1.6.2016 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்த கே.முருகேசன்; 3.6.2016 அன்று சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை– 1, கே– நிறுமம், 60-ம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்த கே.அர்ஜூன்ராஜ்; 14.6.2016 அன்று விருதுநகர் மாவட்ட ஆயுதப் படை பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த. துரைராஜ் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

1.3.2016 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், என்.என்.கண்டிகையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சிவக்குமார்; 23.3.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கிருஷ்ணன்; 21.6.2016 அன்று திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன்கள் சந்தோஷ் மற்றும் நிவேத் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

Leave a Reply