- செய்திகள், மாநிலச்செய்திகள்

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ஜெயலலிதா உத்தரவு…

சென்னை, ஜன. 22-

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23  காவலர்களின் குடும்பங்களுக்கு  முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம்  ரூபாய் வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன் என்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

மகளிர் காவல் ஆய்வாளர்

9.10.2015 அன்று  கிருஷ்ணகிரி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் ஆய்வாளராகப் பணி புரிந்த  ரவிக்குமார், 20.10.2015 அன்று  சென்னை, ஆவடி,  வீராபுரம், "பி" நிறுமம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3-ம் அணியில் உதவி ஆய்வாளராக பணி புரிந்த வி.சேகர், 21.10.2015 அன்று  திருப்பூர் மாவட்டம், சேயூர் காவல் நிலையத்தில் 2-ம் நிலைக் காவலராகப் பணி புரிந்த சிலம்பரசன், 23.10.2015 அன்று  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிந்த பி.கவுரி, 24.10.2015 அன்று  திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டுநராகப் பணி புரிந்த டேவிட் விமல்ராஜ், 28.10.2015 அன்று  கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த டி.தர்மராஜ்.
முதல் நிலைக் காவலர்
1.11.2015 அன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ராஜாங்கம், 4.11.2015 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப் படை 1, 35-ம் அணி "ஊ" நிறுமத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த டி.ராஜூ, 6.11.2015 அன்று திருவாரூர்  மாவட்டம், மன்னார்குடி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த சி.லதா, 7.11.2015 அன்று  கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப்  பணி புரிந்த ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, 9.11.2015 அன்று  காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில்  காவலராகப் பணி புரிந்த டி.செந்தில்குமார்.
உடல் நலக்குறைவால் மரணம்
11.11.2015 அன்று   கிருஷ்ணகிரி  மாவட்டம்,  தளி காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி  புரிந்த கோவிந்தசாமி, 14.11.2015 அன்று கன்னியாகுமரி  மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த வி. முருகராசு, 15.11.2015 அன்று  நாமக்கல் மாவட்டம்,  மோகனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த   ஆர்.சேகர், 16.11.2015 அன்று தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த  சம்பத்குமார் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.
சாலை விபத்தில்…
23.9.2015 அன்று  திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த எஸ்.சக்திவேல், 14.10.2015 அன்று  சென்னை பெருநகர காவல், ஆயுதப் படை பிரிவு-2,  6-ம் அணி, இ-நிறுமத்தில் காவலராகப் பணி புரிந்த வி.ராஜபாண்டி, 18.10.2015 அன்று  ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராகப் பணி புரிந்த குமார், 25.10.2015  அன்று திருநெல்வேலி மாவட்டம்,  சிவகிரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த மாரியப்பன், 9.11.2015 அன்று  வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில்  காவலராகப் பணி புரிந்த தீபன்.
14.11.2015 அன்று சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக்  காவலராகப் பணி புரிந்த வேடிச்சி, 24.11.2015 அன்று கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த ஏ.தங்கதுரை, 27.11.2015 அன்று கிருஷ்ணகிரி  மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த எம்.பி.முருகன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
தலா ரூ.3 லட்சம்
பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த  இந்த 23 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்,  மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
காயம் அடைந்த…
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கிளைச் சிறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணி புரிந்து வரும்  திரு. சு.சரத்குமார் என்பவர் 14.10.2015 அன்று  சாலை விபத்தில் பலத்த காயமடைந்ததால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.50,000 வழங்க  நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply