- உலகச்செய்திகள், செய்திகள்

பல்வேறு நாடுகளை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர் ஓமனில் சாலை விபத்து

துபாய், மார்ச். 2:- ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பகுத் மற்றும் இப்ரி நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களை இணைக்கும் இடத்தில் நதா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 1 மணியளவில், பஸ் ஒன்று ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட சிதிலங்கள் மீது, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தார்கள். அவர்களில் 6 பேர் ஓமனையும், 4 பேர் சவுதி அரேபியாவையும், 2 பேர் பாகிஸ்தானையும், ஒருவர் ஏமனையும் சேர்ந்தவர்கள். மற்ற 5 ேபரை அடையாளம் காண முடியவில்லை.

Leave a Reply