- செய்திகள், வணிகம்

பருத்தி உற்பத்தி குறையும்

எடல்வைசஸ் வேளாண் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த ஆண்டில் பருத்தி உற்பத்தி 11 சதவீதம் குறைந்து 3.35 கோடி பொதிகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பருத்தி பயிரிடும் பரப்பு குறைந்தது, விளைச்சல் பாதிப்பு போன்றவையே இதற்கு காரணம். சென்ற ஆண்டில் 3.76 கோடி பருத்தி பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தி கொண்டதாகும். முந்தைய ஆண்டில் போதிய வருவாய் கிடைக்காததால் பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதுவே பருத்தி பயிரிடும் பரப்பு குறைந்தற்கு முக்கிய காரணம். வட இந்திய மாநிலங்களில் பருத்தி செடிகளில் ஏற்பட்ட நோய் தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். இது போன்ற காரணங்களால் இந்த ஆண்டில் பருத்தி உற்பத்தி குறையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply