- செய்திகள், வணிகம்

பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு இலக்கை காட்டிலும் குறைந்தது

இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (ஷியாம்) இது குறித்து கூறியதாவது:-

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 41 லட்சம் பயணிகள் வாகனங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 34 லட்சம் வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. ஆக, பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு இலக்கை காட்டிலும் 18 சதவீதம் குறைந்தது. அதே போல் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பும் இலக்கை காட்டிலும் 42 சதவீதம் குறைந்து 1.88 கோடியாக சரிந்தது. 3.26 கோடி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதே வேளையில், கடந்த 2006-16 ஆட்டோமோடிவ் மிஷன் திட்டத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டு மொத்த அளவில் வாகன உற்பத்தி 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஷியாம் தெரிவித்துள்ளது.

Leave a Reply