- செய்திகள், விளையாட்டு

பதக்கம் வெல்வதே இலக்கு-ஸ்ரீகாந்த்…

ஹைதராபாத், பிப்.22:-
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தன்னுடைய தற்போதைய இலக்கு என்று இந்திய பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்,

ஹைதாராபாதில் ஆசிய பாட்மிண்டன் அணி சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரீகாந்த் நேற்று  செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், உலகத் தரப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பதில் எந்த அவசரமும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து நன்றாக விளையாடவே விரும்புவதாகவும் அவ்வாறு விளையாடும்போது தானாகவே முதல் இடம் வந்துசேரும் என்றும்  குறிப்பிட்டார்.

பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்ற அவர், வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் விரும்புவதாகவும், கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளதால் கடுமையாக உழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் மலேசிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த், சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டமும் வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டில் நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்றும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.

Leave a Reply