- செய்திகள்

பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு டாக்டர் அன்புமணி வாழ்த்து ரியோ ஒலிம்பிக்…

சென்னை, ஆக. 19-
பா.ம.க.இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்… பாராட்டுக்கள்!
பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மல்யுத்தப் போட்டியில் முழுத் திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ளார் ஹரியானாவின் சாக்சி மாலிக். இதன் மூலம் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார் அவர்..
சாக்சி பதக்கம் வென்றிருப்பதன் மூலம், இனிவரும் போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீதான அழுத்தம் விலகும். அதன்பயனாக அடுத்த சில நாட்களில்  மேலும் சில பதக்கங்களை குவிக்க இந்திய வீரர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply