- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

பணத்தைப் பார்க்காமல் 80 சதவீதம்பேர் வாக்களித்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இல.கணேசன் பேச்சு…

திருவெறும்பூர்,ஏப்.19-
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் பணத்தை பார்க்காமல் மனதை பார்த்து 80 சதவீதம் பேர் வாக்களித்தால் ஆட்சி மாற்றம் நிச்சயமென தேசிய செயலாளர் இலகணேசன் தெரிவித்தார்.
கட்சி அலுவலகம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பா.ஜ.க. வேட்பாளராக சிட்டிபாபு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருவெறும்பூர் பாலாஜி நகர் பகுதியில்  கட்சி அலுவலகத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது, நடந்து முடிந்த பாராளுமண்ற தேர்தலில் பாஜக கட்சி 19.6 சதவிதம் வாக்குகளை பெற்றுள்ளது.
நிச்சயம்
நடைபெற உள்ள சட்ட மன்ற  தேர்தலில் அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் பதிவான 80 சதவீதம் வாக்குகளைப்போல் தமிழகத்தில் 80 வாக்குகள் பணத்தைப் பார்க்காமல் மனதைப் பார்த்து வாக்களித்தால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில், திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் சிட்டிபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியினர் எராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply