- செய்திகள், விளையாட்டு

பட்டம் வென்றார் இந்திய வீரர் பிரணாய் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்

பசேல், மார்ச் 21:-
சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசேல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜெர்மனி வீரர் மார்க் வெய்பிலரை 21-18, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பிரணாய் 2014-ம் ஆண்டு இந்தோனேசிய ஓபன் கிராண்ட் ப்ரீ போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் 11-21, 19-21 என்ற கணக்கில் சீனாவின் வாங் யிஹானிடம் அரை இறுதியில் தோல்வி கண்டார்.

Leave a Reply