- செய்திகள், வணிகம்

பஞ்சாப் நேஷனல் பேங்க் லாபம் ரூ.51 கோடி

 

நாட்டின் 2-வது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் இந்த நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ரூ.51 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 93 சதவீதம் குறைவாகும். வாராக் கடனுக்காக அதிக அளவில் ஒதுக்கீடு செய்ததே இதற்கு காரணம். 2014 டிசம்பர் காலாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.775 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.13,891 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் வருவாய் ரூ.12,905 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வாராக் கடன் 5.97 சதவீதத்தில் இருந்து 8.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக் கடன் 3.82 சதவீதத்தில் இருந்து 5.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply