- செய்திகள், மாநிலச்செய்திகள், வணிகம்

பங்குச் சந்தைகளில் ‘அடி மேல் அடி’ சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிவு…

புதுடெல்லி, டிச.10:-

தொடர்ந்து ஆறாவது வர்த்தக தினமாக நேற்றும் பங்குச் சந்தைகளில் பின்னடைவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 89 புள்ளிகள் வீழ்ந்தது.

நீதிமன்ற உத்தரவு

சுப்பிரமணியசாமி தொடர்ந்த ‘நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில்’ சோனியாவும், ராகுலும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடந்த 2 தினங்களாக பாராளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கியது. இதனையடுத்து ஜி.எஸ்.டி. மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. பங்குச் சந்தைகளில் சரக்கு போக்குவரத்து துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சி கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி, உலோகம், தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்பட பெரும்பான்மையான துறைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தன.

பி.எச்.இ.எல்.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பி.எச்.இ.எல்., டி.சி.எஸ்., ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. வேதாந்தா, டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 274.28 புள்ளிகள் சரிந்து 25,036.05 புள்ளிகளில் முடிவுற்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 89.20 புள்ளிகள் குறைந்து 7,612.50 புள்ளிகளில் நிலை கொண்டது.

Leave a Reply