- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

நெஹ்ரா, பும்ராவுக்கு பதில் சமியை கொண்டுவருவது கடினம் தோனி விளக்கம்

 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு முகமது சமி தகுதியாக உள்ளார் என்றாலும் ஜஸ்பிரீத் பும்ரா அல்லது ஆஷிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக அவரை கொண்டுவருவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

மிர்பூரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பின் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய தோனி,  ஷமி தகுதியுடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அதே சமயம் புத்தம்புது பந்துகளைக் கூட அருமையாக கையாளும் திறன்படைத்த பும்ராவுக்கு பதில் ஷமியை அணியில் சேர்ப்பது கடினமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 20 ஓவர் உலக கோப்பைப் போட்டிக்கு முன்னதான இந்திய அணியின் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஷமி முதலில் தனது திறமையை நிரூபிக்கட்டும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply