- மருத்துவம்

நெல்லிக்காய்

எளிதில் ஜீரணமாவதோடு மற்ற உணவுகளையும் சேர்த்து செரிக்க வைப்பதில் நெல்லிக்காய்க்கு நிகர் இல்லை.

*  குடல் பகுதியிலும், உணவுக் குழாயிலும் ஏதேனும் அடைப்பு இருந்தால் ஒரு நெல்லிக்காயை சாப்பிட சட்டென அடைப்பு நீங்கும்.

*  வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே ஃபிரெஷ்ஷான நெல்லிக்காய் கிடைக்கும். எனவே, மற்ற நாட்களில் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் நெல்லிமுள்ளி என்ற உலர்ந்த காயை வாங்கி சாப்பிடலாம்.

*  தினமும் 2 நெல்லிக்காய்களை சாப்பிடுகிறவர்களுக்கு நோய் நெருங்காது.  வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் தவழும்.

*  நன்கு முற்றிய நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் 2 சாப்பிட்டு வர, உடல் பலம் பெறும்.  நன்றாகப் பசிக்கும்.  சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.

*  வாய்க்கசப்பு, வாந்தி, உமட்டல் இருந்தால் நெல்லிக்காயை வாயில் அடக்கிக் கொண்டால் போதும். பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

Leave a Reply