- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

நெற்குன்றம், வளசரவாக்கத்தை சேர்ந்த 1,830 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா …

திருவள்ளூர், மார்ச் 2-
நெற்குன்றம், அயனம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை மக்கள் 1,830 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களைஅமைச்சர் அப்துல் ரஹீம் நேற்று வழங்கினார்.
இலவச வீட்டுமனை பட்டா
திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம், அயனம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை மக்ககளுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, மதுரவாயல் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கி, 1,830 பேருக்கு ரூ. 278.10 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சியில், பீம்ராவ் எம்.எல்.ஏ. (மதுரவாயல் தொகுதி), வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. (உத்திரமேரூர் தொகுதி), சென்னை மாநகராட்சி துணை மேயர் பென்ஜமின், பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன்,  11-வது மண்டல குழுத்தலைவர் சேகர், உதவி இயக்குனர் (நில அளவை) தியாகராஜன், மதுரவாயல் தனி தாசில்தார்கள் சுப்பிரமணியன், செந்தில்வேல் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply