- செய்திகள், திண்டுக்கல், மாவட்டச்செய்திகள்

நூற்பாலையில் 2,315 சேலைகள் பறிமுதல் பறக்கும் படை அதிரடி

திண்டுக்கல், மார்ச்29-திண்டுக்கல் என்.எஸ். நகரைச் சேர்ந்தவர் கர்ணன். அ.தி.மு.க. பிரமுகர். சீலப்பாடி ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். செட்டிநாயக்கன்பட்டியிலிருந்து நந்தவனப்பட்டிக்குச் செல்லும் சாலையில் இவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இங்கு வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக சேலைகள் வைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தீனதயாளன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 9 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான 2315 சேலைகளை அவர்கள் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதிமுக பிரமுகர் மில்லில் பதுக்கி வைத்திருந்த சேலை பறிமுதல் செய்யப்பட்ட சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply