- செய்திகள், விளையாட்டு

நீளம் தாண்டுதலில் பிரேம் குமார் வெள்ளி வென்றார் ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டி

தோஹா, பிப்.23:-
ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் குமாரவேல் பிரேம் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் குமாரவேல் பிரேம் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் 7.92 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி வென்றார். முன்னதாக சினாவின் ஜாங்க் யோகுவாங் 7.99 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.

குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் சிங் வெண்கலம் வென்றுள்ளார். இவர் 18.77 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றுள்ளார். இந்த நிலையில் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply