- செய்திகள், தேசியச்செய்திகள்

நீர்வள பாதுகாப்புக்கு புதிய திட்டம்

புதுடெல்லி, ஏப். 20-
நாடு முழுவதும் வறட்சி நீடிக்கும் நிலையில், நீர்வள பாதுகாப்புக்கு பரந்த அளவிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. நடப்பு கோடை காலத்தில் நீர் இருப்பு, வழக்கத்தை விட 26 சதவீதமாக குறைந்துள்ளது என புள்ளி விலரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்காக பரந்த அளவிலான திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்காக பரந்த அளவிலான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அடுத்த இரு மாதங்களில் திட்டம் தொடங்கப்படும். அதிகாரப்பூர்வ இளைஞர் அமைப்புகளான என்.சி.சி., என்.எஸ்.எஸ்., பாரத் ஸ்கவுட் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம்,உள்ளிட்ட அமைப்புகள் இந்த திட்டத்தில் தங்கள் பங்களிப்பின் தேவையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். தண்ணீர் சிக்கனம் குறித்து மாணவர் அமைப்புகள் மக்களிடையே விளக்கிக் கூற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply