- செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…

 

சென்னை, ஆக.17-
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) அவசியம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாநிலங்களுக்கு நுழைவுத் தேர்வில் இருந்து 1 வருடத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் 15 சதவீத ஒதுக்கீடுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதல் கட்ட நுழைவுத் தேர்வு கடந்த மே 1-ந் தேதியும், 2-ம் கட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 24-ந் தேதியும் நடைபெற்றது. இதில் 2-ம் கட்டமாக நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது முடிவுகளை காணலாம். இதையடுத்து இவர்களுக்கான கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முடிந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply