- உலகச்செய்திகள், செய்திகள்

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

 

இஸ்லாமாபாத், ஏப். 12:-
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைஓரத்தில் உள்ள இந்துகுஸ் மலைப்பகுதியில் 236 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நேற்றுமுன்தினம் பயங்கர ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கைபர்-பக்துன்கவா  மாநிலத்தில் 5 பேரும், கில்ஜித்-பல்டிஸ்தான் மாநிலத்தில் உள்ள டயாமிர்  ஏரியா பகுதியில் ஒருவரும் பலியானார்கள். 28-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

இது ரிக்டர் அளவில் 7.1 புள்ளிகளாக பதிவானது.  ஏறக்குறைய 10 முதல் 15 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் நகரங்கள்,  எல்லைப்பகுதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் வடமாநிலங்கள் பலவற்றிலும் உணரப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், பதற்றமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி, நீண்ட நேரம் வீட்டுக்கு திரும்பாமல் பீதியுடன் சாலையில் காத்திருந்தனர்.

Leave a Reply