- செய்திகள், ஜோதிடம்

நாளும் கோளும்

 

ஜோதிட ரத்னா நெல்லை கே.வசந்தன்
05.01.2016        – செவ்வாய்க் கிழமை
மன்மதவருடம்    – மார்கழி 20
சூரிய உதயம்     : காலை- 06:38 மணி
பிறை        : தேய்பிறை
திதி            : ஏகாதசி விடியற்காலை: 05:56 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்        : விசாகம் நாளை காலை: 06:49 மணி வரை
யோகம்           : மரண யோகம்
நல்ல நேரம்    : காலை: 07:30-08:30 மாலை: 04:30-05:30
ராகு காலம்    : பகல்: 03:00-04:30
எமகண்டம்        : காலை: 09:00-10:30
குளிகை        : பகல்: 12:00-01:30
சூலம்            : வடக்கு
பரிகாரம்        : பால்
சந்திராஷ்டமம்    : அசுவினி
விசேஷம்        : ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
இன்று        : கீழ் நோக்குநாள்
சூரிய அஸ்தமம்    : மாலை – 06:09 மணி

மேஷம்:
குழந்தைகள் குஷியுடன் இருக்கும் நாள். சிலர் அம்மன் கோவிலுக்கு சென்று திரும்புவார்கள். மகான்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டுப்பெண்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிக்கு அழைப்பு வரும். ரெயில்வே ஊழியர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். சந்திராஷ்டம தினமாக இருப்பதால் புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் வருகை திருப்திகரகமாக அமையும்.
ரிஷபம்:
துவண்டு கிடப்பவர்கள் துள்ளியெழும் நாளாக இருக்கும். மற்றவர்களின் ஏச்சுபேச்சுக்களை வாங்கி மனதளவில் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வேலைக்கான அழைப்புவரும். பயன்படுத்திக் கொள்வது நல்லது. வளர்இளம் பெண்களின் வேலைக்கனவுகள் பலிதமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போர்கள் நினைத்த காரியங்கள் சாதகமாக நடந்தேறும். பெரியோர்கள் குழந்தைகளை மனமார ஆசீர்வதித்து மகிழ்வார்கள்.
மிதுனம்:
வரவும் செலவும் சரியாக இருக்கும். கடன் வாங்கியாவது சந்தோஷமாக இருக்க வேண்டியதிருக்கும். கேட்ட இடங்களில் பணம் முந்தியடித்து ஓடிவரும். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்த வேண்டிவரும் என்பதனை சிந்தித்து செயல்படுவது ரொம்ப நல்லது. பாத்திர வியாபாரிகளுக்கு வருமானம் பளபளக்கும். நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
கடகம்:
மனதை மகிழ்விக்கும் நாளாக இருக்கும். பெண்கள் முகமலர்ச்சியுடன் காட்சியளிப்பார்கள். வியாபாரிகள் தொட்டகாரியங்கள் அனைத்தும் துலங்கும். கெடுக்க நினைத்தவர்களையும் வாழவைத்து பார்ப்பீர்கள். நண்பர்கள் வியாபாரத்தில் உதவிகரமாக இருப்பார்கள். கிராம வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட சறுக்கல் மாறி வியாபாரம் சீராகும். பழ வியாபாரிகள் பழைய நிலையை அடைவார்கள். ரியல்-எஸ்டேட் புரோக்கர்கள் புதிய நிலங்களை நோக்கிப் பயணமாவார்கள்.
சிம்மம்:
சராசரியான நாள்.  மனைவி மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி வருமானத்தைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகள் வீண் விதண்டாவாதங்களை தவிர்ப்பது எதிர்கால வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். தொழில் அதிபர்களுக்கு பழகிய நபர்களால் ஆதாயம் இருக்கும். சலூன் கடைகளில் வாடிக்கையாளர் வருகை மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.
கன்னி:
கலைகள் வெளிப்படும் நாள். தொழில்விஷயமாக இவ்வளவு நாட்களாக இருந்து வந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நிலை ஆரோக்கியம் பெறும். வெளியிடங்களில் இருந்து வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். நண்பர்களால் உதவி இல்லையென்றாலும் உபத்திரம் இல்லாமல் இருக்கும். புதிய கடைக்கான அட்வான்ஸ் பணத்திற்கான ஏற்பாடுகள் சாதகமாக நடந்தேரும். குழந்தைகள் கல்வியில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
துலாம்:
சந்திரன் ராசியைக் கடந்தாலும் சுறுசுறுப்புடன் இயங்கும் நாள்.  வித்தியாசமாக எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் தொற்றிக்கொள்ளும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகம் ஏற்படும். நேர்மை தவறாமல் இருக்க முயற்சி பண்ணுவதால் சில காரியங்கள் நடக்க தாமதமாகலாம். தொழிலில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசியல்வாதிகளின் அதிகாரம் உயரும் விதமாக புதிய பதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
உள்ளத்தில் உற்சாகம் பெருகும் நாள்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியூரில் இருந்து உறவினர்கள் வர வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிட்டும். பழுதுபட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றி புதிதாக வாங்க வாய்ப்புள்ளது. பிளாட்பார விற்பனையாளர்கள் சீசனுக்குத் தகுந்த பொருட்களை விற்றுக் காசாக்குவார்கள். டீ மாஸ்டர்கள் பிஸியாக இருப்பார்கள்.
தனுசு:
மனைவியின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டிய நாள்.  தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து திடீர் பணம் வந்துசேரும். கஷ்டமென்று வந்து உதவி கேட்கும் நண்பருக்கு உதவிட மனம் ஏங்கும். உங்கள் செயல்களால் மனைவி பெருமிதம் கொள்வார். தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் திறமையான பேச்சால் உடன்பணிபுரிபவர்கள் பிரமித்துப்போவார்கள். சில்லரை வியாபாரிகளுக்கு பணவரத்து குறைவிருக்காது.

மகரம்:
ஏமாற்றங்களால் துவண்டுபோகாத நாளாக இருக்கும். அள்ளஅள்ள குறையாத அட்சயபாத்திரமாக இருந்து எளியவருக்கு உதவிசெய்வதில் வல்லவர்களாக திகழ்வீர்கள். உடல்நலம் சரியில்லாத மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வீர்கள். பூர்வீக ஊர்களில் வில்லங்கத்தில் இருக்கிற நிலம் விற்பனையாகும்.  வியாபாரிகள் பெண் வாடிக்கையாளர்களால் லாபம் அடைவார்கள்.  மனதில் நம்பிக்கை ஊற்றெடுக்கும்.
கும்பம்:
பிரகாசமான நாளாக இன்று இருக்கும். ஏராளமான நஷ்டங்களைச் சந்தித்து திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு புதியவாய்ப்புகளால் நம்பிக்கை பிறக்கும். புதிய வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்போருக்கு வேலைகள் ஜரூராக நடக்கும். உடன் பணிபுரிபவர்களின் உள்குத்து வேலைகளை உஷாராக இருந்து சமாளிப்பீர்கள். எதிர்வரும் காலத்திற்கான சேமிப்புகளை துவங்குவீர்கள்.  வியாபாரிகளின் சரக்குகள் உடனடியாக விற்றுத்தீரும்.
மீனம்:
தொழில் போட்டியாளர்களை விவேகமாக இருந்து வெற்றி கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதனால் மனம் அமைதி கொள்ளும். வீடு மாறவேண்டுமென நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான புதுவீடுகள் அமையும். தீப்பெட்டி மொத்தவியாபாரிகள் லாரியில் லோடு வருவதை கண்காணித்துக்கொண்டிருப்பது நல்லது.

Leave a Reply