- ஜோதிடம்

நாளும் கோளும்

ஜோதிட ரத்னா நெல்லை கே.வசந்தன்
26.03.2016        : சனிக் கிழமை
மன்மதவருடம்    : பங்குனி – 13
சூரிய உதயம்     : காலை: 06:27 மணி
பிறை        : தேய்பிறை
திதி            : திருதியை இரவு: 11:37 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்        : சுவாதி நள்ளிரவு: 02:39 மணி வரை பிறகு விசாகம்
யோகம்           : அமிர்த யோகம் நள்ளிரவு: 02:39 மணி வரை பிறகு சித்த யோகம்
நல்ல நேரம்    : காலை: 10:30-11:30 மாலை: 04:30-05:30
ராகு காலம்    : காலை: 09:00-10:30
எமகண்டம்        : பகல்: 01:30-03:00
குளிகை        : காலை: 06:00-07:30
சூலம்            : கிழக்கு
பரிகாரம்        : தயிர்
சந்திராஷ்டமம்    : ரேவதி
விசேஷம்        : காஞ்சி ஸ்ரீ.ஏகாம்பரேஸ்வரர் 108 சங்காபிஷேகம்
இன்று        : சமநோக்கு நாள்
சூரிய அஸ்தமம்    : மாலை: 06:27 மணி

மேஷம்:
அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதன் மூலம் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.  சருமம் தொடர்பான பிரச்னை ஏற்படலாம். உணவில் கவனம் வேண்டும். டென்ஷன் நிறைந்த வேலை வந்து சேரும்.
ரிஷபம்:
உங்களின் கருத்துகளுக்கு குடும்பத்தில் நல்ல மதிப்பு கூடும்.  பணிபுரியும் பெண்களின் சமூக அந்தஸ்து உயரும். இளம் கலைஞர்களும், நடிகைகளும் புது வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்களின் நீண்டநாள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.
மிதுனம்:
பெண்களின் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். சுற்றியிருப்பவர்களின் அபிப்ராயங்களை ஏற்றுக்கொள்வீர்கள். இதுவரை எதிர்த்து நின்றவர்களை நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியம் நடந்தேறும்.
கடகம்:
மற்றவர்கள் யோசிக்கும் அசாதரணமான முடிவுகளை துணிந்து மேற்கொள்வீர்கள். வீசா தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். தொலைதூர உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் மிளிரும். குடும்பமே உங்களை கொண்டாடும்.
சிம்மம்:
உடன் பணிபுரிபவர்களிடம் கவனமுடன் பேசுங்கள். நீங்கள் விளையாட்டாகப் பேசுகிற விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இல்லத்தில் சந்தோஷம் பெருகும்.

கன்னி:
பெண்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கணவருக்கு பிடித்தமானதை செய்து கொடுத்து பெண்கள் மகிழ்ச்சி கொள்வார். சுற்று வட்டாரத்தில் வாங்கிருந்த சில்லறைக் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் கூடும்.
துலாம்:
பதறிய காரியம் சிதறும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். அனுபவ ஞானம் மேலோங்கும். குடும்பத்தில் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து போவீர்கள். நண்பர்களில் நல்லவர்களை புரிந்து கொள்வீர்கள். நல்ல நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கூடும். வேலையாட்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் பாசத்தைக் காட்டுவார்கள்.  சோர்ந்து இருக்கும் பிள்ளைகளை வெளியில் அழைத்து சென்று உற்சாகப் படுத்துவீர்கள்.
தனுசு:
புதிய நடைமுறைகளை வியாபாரத்தில் புகுத்துவீர்கள். வேலையாட்கள் அக்கரையாக இருப்பாரகள்.  மற்றவர் மனம் புண்படியான வார்த்தைகளை பேச்சில் குறைத்துக் கொள்வீர்கள். உங்கள் விரல் அசைவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள்.
மகரம்:
மனம் மகிழ்ச்சியுறும் படியான சம்பவங்கள் நடக்கும். மனைவிக்கு புதிதாக பரிசுகள் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். தாமதமான திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். இளம் தம்பதிகள் டூருக்கு தயாராவார்கள்.

கும்பம்:
பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் படியான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆன்மிக தொடர்புடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். அரசு வேலையில் பணிபுரிபவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும்.
மீனம்:
தங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள். வருமானத்திற்கான புதிய வழிகளை யோசிப்பீர்கள். நண்பர்களால் உதவி இல்லை என்றாலும் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொந்த பந்தம் நெருக்கடியில் உதவும்.

Leave a Reply