- ஜோதிடம்

நாளும் கோளும்

 

01.03.2016 : செவ்வாய்க்கிழமை

மன்மதவருடம் : மாசி 18

சூரிய உதயம்  : காலை: 06.39 மணி

பிறை : தேய்பிறை

திதி : ஸப்தமி பகல்: 12.34 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : அனுஷம் நள்ளிரவு: 11.22 மணி வரை பிறகு கேட்டை

யோகம்           : சித்த யோகம்

நல்ல நேரம் : காலை: 07.30-08.30 பகல்: 04.30-05.30

ராகு காலம் : பகல்: 03.00-04.30

எமகண்டம் : காலை: 09.00-10.30

குளிகை : பகல்: 12.00-01.30

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

சந்திராஷ்டமம் : அசுபதி, பரணி

விசேஷம் : கோவை ஸ்ரீ.கோணியம்மன் திருக்கல்யாண வைபவம்

இன்று : சமநோக்கு நாள்

சூரிய அஸ்தமம் : மாலை: 06.27 மணி

மேஷம்:

கணவரோடு அந்யோன்யம் வலுக்கும். குடும்பத்தின் தேவை உணர்ந்து சில பொருட்களை பிள்ளைகள் வாங்கி வருவார்கள். அழகு கலை நிபுணர்களுக்கு முகூர்த்த ஆர்டர்கள் குறைவில்லாமல் இருக்கும். வியாபாரிகள் புதிய சரக்குகளை கொள்முதல் செய்ய வேண்டி வரும்.

ரிஷபம்:

புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு கட்டுமான வேலைகளுக்கு பொருத்தமான சித்தாள்கள் அமைவார்கள். கட்டுமான நிறுவன முதலாளிகளுக்கு தொழில் இயல்புநிலையை அடையும். ஆசிரமங்களில் தங்கி சேவைபுரியும் ஆன்மிக அன்பர்களுக்கு மனதில் அமைதி ஏற்படும்.

மிதுனம்:

பெண்கலைஞர்கள் ஆன்மிக விரதங்களை மேற்கொள்வார்கள். மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களை ஈஸியாக செய்து முடிப்பார்கள். தொழிலதிபர்கள் புதிய முயற்சிகளை துரிதமாக துவக்குவார்கள். வணிகர்கள் வழக்கத்திற்கு மாறான வியாபாரத்தை மேற்கொள்வார்கள்.

கடகம்:

பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாவார்கள். கலைஞர்கள் வெளியூர் பயணங்களை ஆரம்பிக்கலாம். சிலர் முதல் முறையாக விமானங்களில் பயணிக்க நேரிடலாம். திரைக்கலைஞர்கள் நண்பர்கள் உதவியோடு சில காரியங்களை முடிப்பார்கள்.

சிம்மம்:

மாணவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். துணிக்கடைகளில் சேல்ஸ் வேலையில் இருக்கிற பிள்ளைகளின் கஷ்டங்களுக்கு விடிவு காலம் விரைவில் பிறக்கும். அரசின் அடிமட்ட பணியாளர்களுக்கு திடீர் அற்புதங்கள் நடக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு மதிப்பு உயரும்.

கன்னி:

வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பட்டா சிட்டா அடங்கல் சம்மந்தமான வேலைகள் ஜரூராக நடக்கும். மாமியார் மருமகளுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் இழுபறியில் இருக்கும். மாணவர்களுக்கு திடகாத்திரமான நாளாக இருக்கும்.

துலாம்:

தொழில் போட்டியாளர்களை நேருக்குநேர் எதிர்கொண்டு சூட்சமமாக வெல்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்க நல்ல கோச் வருவார்கள். எழுத்தாளர்களுக்கு புதியசிந்தனைகள் ஊற்றெடுத்து பெருக்கி அடுத்தவர்களை விமர்சிப்பார்கள்.

விருச்சிகம்:

ஏற்ற இறக்கங்களை உயர்வுகளுக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்வீர்கள். செவிலியர்கள் வேலைப்பளுவோடு இருப்பார்கள். சிலர் கண் கண்ணாடிகளை மாற்ற நேரிடலாம். சாதுர்யமிக்க திறமைகளை இளைஞர்கள் வெளிப்படுத்துவார்கள்.

தனுசு:

இன்ஜினியர்கள் தன் வருமானத்தில் கொஞ்சம் ஆதரவற்றோருக்கு உதவ ஒதுக்கும் எண்ணம் மேலோங்கும். மனைவியை மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசுபவர்களை உரிமையுடன் கண்டிப்பீர்கள். டிரைவர்கள் விபத்துக்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்:

மொத்த வியாபாரிகள் சில்லரை கடைக்காரர்களிடம் விட்டுக் கொடுத்து போவார்கள். மாணவர்களுக்கு உத்வேகம் பிறக்கும். நெருங்கிய நண்பர்களுக்கு உதவப்போய் செலவுகள் அதிகரிக்கலாம். கிரஹபிரவேசம் செய்யாமல் இருக்கும் வீடுகளில் பால் காய்ச்ச தேதி குறிப்பீர்கள்.

கும்பம்:

தச்சுவேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவசர வேலைகளால் வருமானம் அதிகரிக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு நாள் விருப்பநாளாக அமையும். வியாபாரிகள் கமிஷன் ஏஜண்ட்களிடம் கவனமுடன் பேசி காரியம் சாதிக்கவேண்டி வரும்.

மீனம்:

ஹோட்டல் மாஸ்டர்கள் வேலை குறைவாக இருப்பதால் உறவினர் வீடுகளுக்கு சென்று வரக்கூடும். நெடுந்தூர லாரி டிரைவர்கள் டென்ஷனை தவிர்த்து நிதானமாக இருக்க வேண்டும். ரெப்களுக்கு வெளியூர் பயணங்கள்  உடல் சோர்வைக் கொடுக்கலாம்.

Leave a Reply