- செய்திகள், விளையாட்டு

‘நாய்வண்டி வரட்டும் உன்னை பிடிச்சு கொடுகிறேன்’

சென்னை, ஏப். 1:-
உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடப்பதற்கு முன் நேற்று முன்தினம் இலங்கை ரசிகர் ஒருவர் இந்திய வீரர் அஸ்வினை டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இதற்கு அஸ்வினும் பதிலுக்கு கலாய்க்க ட்விட்டரில் வாக்குவாதம் முற்றியது.

அந்த ரசிகர் அஸ்வினை பார்த்து “நாளை கெயில் புயல் வீசும் இந்தியா தோற்கும் என கூறினார்''.  பதிலுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்தார். “  ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொள்வேன். கடந்தமுறை நீ தான் கூறினாய். நீ இன்னுமா கிரிக்கெட் பார்க்கிறாய் '' என கலாய்த்தார்.

“ நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால், அரையிறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி அடையும் போது, அவர்களின் முகத்தைப் பார்க்க பிடிக்கும் '' என்று அவர் பதிலுக்கு டுவிட் செய்தார். இந்த டுவிட் அஸ்வினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே பதிலடி கொடுத்த அஸ்வின், “ நாய் வண்டி வரட்டும் உன்னை பிடிச்சுக் கொடுக்கிறேன். அரையிறுதியில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை ''  என பதிலடி கொடுத்தார்.

இதேபோல் வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களின் போது டுவிட்டரில் திட்டுபவர்களை அஸ்வின் கலாய்த்துள்ளார். மேலும்  பாகிஸ்தான் ஆட்டத்தின் போது ரசிகர்களோடு வாக்குவாதத்தில் ஹர்பஜனும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply