- செய்திகள், நாமக்கல், மாவட்டச்செய்திகள்

நாமக்கல் அருகே, 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல், மார்ச் 30-
நாமக்கல் அருகே 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் உரிய ஆவணங்கள் வழங்கப்பட்ட பிறகு அவை வழங்கப்பட்டன.

32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல்  சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில்  போலீசார் நாமக்கல் அடுத்த முதலப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து  வந்த தனியார் பாதுகாப்பு (செக்யூரிட்டி)  நிறுவனத்திற்கு சொந்தமான 2 வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வேன்களில் 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து  நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி  பகுதியில் உள்ள தங்க நகை  கடைகளுக்கு அவை கொண்டு செல்லப்படுவதாக அதில் வந்தவர்கள் கூறினர்.

இதனையடுத்து நகைகளுடன் அந்த 2 வேன்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், நாமக்கல் வட்டாட்சியர்  அலுவலகத்துக்கு அவற்றை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுவிப்பு

இந்தநிலையில்  அந்தநிறுவனத்தில் இருந்து உரிய ஆவணங்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பி  வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் நகைகளுடன் வந்த அந்த 2 வேன்களையும் விடுவித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மண்டல தேர்தல் அதிகாரி கண்ணன்  கூறுகையில், தங்க நகைக்கான உரிய ஆவணங்கள் இருந்தாலும்,  எந்த  நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது  என்ற ஆவணங்களை வணிக நிறுவனங்கள் வாகன ஓட்டுனர்களிடம் தெளிவாக அளிக்குமாறு  அறிவுறுத்தினார்

நாமக்கல் அருகே பறக்கும் படையினர் 32 கிலோ தங்க நகைகளுடன் பறிமுதல் செய்த 2 வேன்களை படத்தில் காணலா

Leave a Reply