- உலகச்செய்திகள், செய்திகள்

நான் முஸ்லிம்களின் தலைவர் அல்ல லண்டன் மேயர் சாதிக் கான் பேட்டி

லண்டன், மே 13-
லண்டன் மாநகரின் புதிய மேயர் சாதிக் கான் நேற்று லண்டன் சிட்டி ஹால் அலுவலகத்தில் வைத்து நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மிகத் தெளிவாக உள்ளேன். நான் முஸ்லிம்களின் தலைவரோ அல்லது முஸ்லிம்களின் செய்தித் தொடர்பாளரோ அல்ல. நான் இந்த லண்டன் மாநகரின் மேயர். இந்த லண்டன் நகரில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நான்  குரல் கொடுப்பேன். இந்த தேர்தல் ஒருவர் முஸ்லிம் ஆகவும், மேற்கத்தியனாகவும் இருக்கலாம் என்பதை நிரூபித்து உள்ளது. மேற்கத்திய கலாசாரம் இஸ்லாமுடன் இணக்கமாகதான் உள்ளது.
இவ்வாறு சாதிக் கான் கூறினார். சமீபத்தில் நடந்த லண்டன் மேயர் பதவிக்கான தேர்தலில், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் அமோக வெற்றி பெற்றார். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பஸ் டிரைவரின் மகன். லண்டன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிமும் இவர்தான்.
——-

Leave a Reply