- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாக்பூர், அம்பேத்கரின் பூமி; சங் பரிவாருக்கான இடம் இல்லை கண்ணையா குமார் பேச்சு

நாக்பூர், ஏப்.15:-

நாக்பூர், அம்பேத்கரின் பூமி என்று அங்கே ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கு இடம் இல்லை என்றும், சங் பரிவார் ஒன்றும் நாடாளுமன்றம் அல்ல  என்றும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தெரிவித்தார்.

தீட்சை பூமி

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி பேசுகையில் நாக்பூரை பிரதானமாக குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாக்பூரில் உள்ள `தீட்சை பூமி'யில் (அம்பேத்கர் புத்தமதத்தை தழுவி தீட்சை பெற்ற இடம்) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கே அவர் உரையாற்றியதாவது:-

தீட்சை பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம் அம்பேத்கரின் பூமி. சங் பரிவார அமைப்புகளின் இடம் கிடையாது. சங் பரிவார் அமைப்பு ஒன்றும் நாடாளுமன்றம் அல்ல. அதேபோன்று, மனு தர்மம் ஒன்றும் அரசியல் சாசனமும் இல்லை.
சித்தாந்த திணிப்பு

மோடி அரசாங்கம் சில தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தற்போது அவற்றை வேகமாக மறந்து வருவதுடன் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஜே.என்.யூ. (ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்) போன்ற கல்வி நிறுவனங்களின் நம்பகத் தன்மையை மோடி அரசாங்கம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்களிடையே அவர்கள் தங்களுடைய சித்தாந்தங்களை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பூனா  திரைப்படக் கல்லூரி, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம், ஜே.என்.யூ. மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ேதசிய தொழில்நுட்பக்  கல்வி நிறுவனம்  (என்.ஐ.டி.) ஆகியவை குறிவைத்து தாக்கப்படுகின்றன. மாணவர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு கண்ணையா குமார் பேசினார்..
——————–

Leave a Reply