- செய்திகள்

நவீன மீன் விற்பனை நிலையங்கள் குறைந்த விலையில் தரமான மீன்கள் கிடைக்க…

சென்னை, ஆக. 9-
பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மீன்கள் கிடைக்க நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்து பேசும் போது அறிவித்த அறிவிப்புகள் வருமாறு:-
நவீன மீன் விற்பனை நிலையம்
* சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில்  அமைந்துள்ள அரசு மீன்பண்ணையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
*  மீனவர்களிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்ட தரமான மீன்களை பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்கிட, தமிழ்நாட்டில் 10 நகரங்களில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் மொத்தம் 1 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். இந்த மீன் விற்பனை நிலையங்களை உறுப்பினர் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஏற்று நடத்தும்.
மாணவ-மாணவிகளுக்கு
* உயர்த்தி வழங்கப்படும் விகிதத்தின்படி மாநில அளவில் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு முறையே 50,000 ரூபாய், 30,000 ரூபாய்,  20,000 ரூபாயும், மாநில அளவில் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு முறையே 25,000 ரூபாய், 20,000 ரூபாய்,  15,000 ரூபாயும், மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு முறையே 6,000 ரூபாய், 4,000 ரூபாய்,  2,000 ரூபாயும், மாவட்ட அளவில் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய்,  1,000 ரூபாய்,  வீதம் ரொக்கப்பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

Leave a Reply