- செய்திகள், வணிகம்

நவம்பர் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் உயர்வு

புதுடெல்லி, டிச. 15:-

பருப்பு வகைகள், வெங்காயம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் உயர்ந்து, மைனஸ்(-)1.99 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 13-வது மாதமாக, மொத்தவிலைப் பணவீக்கம் மைனசில் இருந்து வருகிறது. கடந்த அக்டோபரில் மொத்தவிலை பணவீக்கம் (-)3.81 சதவீதம் இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இது (-)1.99 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பருப்பு விலை 58.17 சதவீதம், வெங்காயம் 52.69 சதவீதமும், காய்கறிகள் 14 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. எரிபொருள்கள் மற்றும் மின்சாரம் விலை (-)11.09 சதவீதமும்,  உற்பத்திப் பொருட்களின் விலை(-)1.42 விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply