- செய்திகள், விளையாட்டு

நல்லெண்ண தூதராக பணியாற்ற ரஹ்மான் சம்மதம் இந்திய ஒலிம்பிக் அணியின்

புதுடெல்லி, மே 13:-

ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பணியாற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. முன்னதாக இந்தப் போட்டியின் நல்லெண்ண தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தி நடிகர் சல்மான் கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இசைப்பாளர் ரஹ்மானும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக  பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஹ்மானிடமிருந்து சம்மதம் தெரிவித்து அதிகார்பூர்வ கடிதம் பெறப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக பணியாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக ரஹ்மான் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் தூதராக பணியாற்ற ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளதை இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தொடர்ந்து சச்சின், அபிநவ் பிந்த்ரா, ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply