- சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்

நட்சத்திர காதல் ஜோடிக்கு திருமணம்…

 

நடிகர் பாபி சிம்ஹா-நடிகை ரேஷ்மிமேனன் இருவருக்கும் இடையே ஒரு படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டது. இந்த காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தபோது அவர்கள் காதலை ஏற்று  திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து இப்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 22-ந்தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கு  நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.அதைத்தொடர்ந்து 24-ந்தேதி சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஒட்டலில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

Leave a Reply