- செய்திகள், மாவட்டச்செய்திகள்

நடையைக் கட்டியது ஐக்கிய அரபு அமீரகம் ஆசிய கோப்பை கிரிக்கெட்ே

மிர்பூர், மார்ச் 1:-
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நடையைக் கட்டியது. நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களம் கண்ட அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

துவக்கத்தில் களம் இறங்கிய ரோஹன் முஸ்தபா, முகமது கலீம், முகமது ஷாஜத் மூன்று பேரும் முறையே 1,1,5 ரன்களில் களம் புகுந்தனர். அந்த அணி 12 ரன்களை சேர்த்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர் சைமன் அன்வரும் உஸ்மான் முஷ்டக்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து முஷ்டாக் ஆட்டமிழந்தார். இவருக்குப் பின் சைமன் அன்வர் ஆட்டமிழந்தார். இவர் எடுத்ததுதான் அணியின் அதிகபட்ச ரன்களாகும். இவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்தார்.

இவருக்குப் பின் களம் இறங்கியவர்களில் அம்ஜத் ஜாவித் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் அமீர், சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 140 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஹபீஸ் 11 ரன்களிலும் ஷர்ஜீர்கான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களம் இறங்கிய மன்சூர் டக்-அவுட்டானார். பாகிஸ்தான் அணி 17 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இதையடுத்து உமர் அக்மலும் சோயப் மாலிக்கும் இணைந்து அதிரடியாக விளையாடி 114 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். அக்மல் சரியாக அரை சதமும் மாலிக் 63 ரன்களும் எடுத்தனர். அக்மல் 2 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் சோயப் 7 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்தனர். கடைசியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளையும் அம்ஜத் ஜாவித்துதான் வீழ்த்தினார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் ஐக்கிய அரபு அமீரகம் தோல்வியைத் தழுவியுள்ளாதல் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது.

Leave a Reply