- செய்திகள்

நடிகர் ரித்தீஷ் மீதான மோசடி புகாரை போலீசார் மீண்டும் விசாரிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை, ஆக. 17-
நடிகர் ரித்தீஷ் மீதான மோசடி புகாரை போலீசார் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு
சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன் என்கிற சுப்பிரமணியன். இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெ.கே.ரித்தீஷ் கடந்த 2014-ம் ஆண்டு என்னை அணுகினார். சென்னையை அடுத்த பெரும்புதூரில் இரும்பு தொழிற்சாலை நடத்தி அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறி என்னிடம் ரூ.3 கோடி பெற்றார். ஆனால் அவர் பணத்தை பெற்றுக் கொண்டு எந்த தொழிற்சாலையும் அமைக்காமல் என்னை மோசடி செய்து விட்டார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே ரித்தீஷ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மீண்டும் விசாரிக்க உத்தரவு
இந்த வழக்கு நேற்று நீதிபதி பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் கடந்த 12-11-2015ல் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் ஒரு  ெவளிநாட்டு வாழ் இந்திய பிரஜை ஆகும். ஆகவே ரித்தீஷ் மீது கொடுக்கப்பட்ட புகாரை புதிதாக மீண்டும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply