- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி தமிழக சட்டசபை தேர்தல் குறித்து

தியாகராயநகர், பிப். 17:- தமிழக சட்டசபை தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
பத்ம விருது

கேள்வி:- மத்திய அரசு உங்களுக்கு பத்ம விருது அறிவித்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கேள்வி:- விருது காலதாமதமாக கிடைத்ததாக உணர்கிறீர்களா?
பதில்:- சரியான நேரத்தில் விருது கிடைத்துள்ளது.
சட்டசபை தேர்தல்

கேள்வி:- தொடர்ந்து தமிழக கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- அதைப் பற்றி எதுவும் பேசவிரும்பவில்லை.
கேள்வி:- வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- ஒன்றும் நினைக்கவில்லை.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Reply