- செய்திகள், தேசியச்செய்திகள்

நடிகர் அனுபம் கெர்ரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ் என்.ஐ.டிக்கு செல்ல ஸ்ரீநகர் வந்த

ஸ்ரீநகர், ஏப்.11-

என்.ஐ.டி கல்வி நிறுவனத்துக்கு செல்வதற்காக காஷ்மீர் வந்த பாலிவுட் நடிகர் அனுபர் ெகர்ரை,  போலீசார் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.

என்.ஐ.டி மாணவர்கள் ேமாதல்

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி) இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் உள்ளூர் மாணவர்களுக்கும், வெளி மாநில மாணவர்களுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் அரையிறுதிப்போட்டியில் தோல்வியுற்றபோது அதை உள்ளூர் மாணவர்கள் கொண்டாடினர். அப்போது உள்ளூர் மாணவர்களுக்கும் வெளிமாநில மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது  கலவரம் மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் இடையேயான மோதலை சமரசம் செய்து பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அனுபம் ெகர் காஷ்மீர் வருகை

இந்நிலையில் என்.ஐ.டி. மாணவர்களை சந்திக்கும் திட்டத்துடன் நேற்று பாலிவுட் நடிகர் அனுபம் கெர் விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காஷ்மீர் போலீசார் அவரை என்.ஐ.டிக்கு செல்லவிடாமல்  விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவரிடம் என்.ஐ.டிக்கு ெசல்ல வேண்டாம் என்றும், அங்கு  சட்டம் ஒழுங்்கு பிரச்சினைகள் ஏற்படும் பதற்றமானநிலை உள்ளது எனக்கூறி அவரை  டெல்லிக்கு திரும்பிச் செல்லுமாறும் போலீசார் அவரை கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து நடிகர் அனுபம் கெர் தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது-

என்னை ஸ்ரீநகருக்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்துவிட்டனர்.  அவர்களிடம்  இதற்கான உத்தரவை காட்டுமாறு கேட்டேன்.  தொடர்ந்து விமான நிலையத்திலேயே இருந்தேன். இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும் விமான நிலையத்தில் அனுபம் கெர் நிருபர்களிடம் கூறியதாவது-

நான் என்.ஐ.டிக்கு பிரச்சினை ஏற்படுத்துவதற்காக வரவில்லை. மாணவர்களு்க்கு எனது தார்மீக ஆதரவை தருவதற்காகத்தான் செல்ல விரும்பினேன். அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக கூறுகின்றனர். லட்சக்்கணக்கானவர்கள் பல்கலைக்கழகத்துக்கு செல்கின்றனர். இது ஒரு பொதுவான இடம் இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் என்னை ஏன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தவேண்டும்.

நான் பிரச்சினை ஏற்படுத்த அங்கு செல்லவில்லை. மாணவர்களை ஊக்கப்படுத்தவே அ்ங்கு செல்ல விரும்பினேன். போலீசார் எனது மூதாதையர்களின் வீட்டுக்கும்  மத்திய காஷ்மீரில் உள்ள கீர்பவானி கோவிலுக்கும்  ெசல்லக்கூட அனுமதி மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் என்னை விமான நிலையத்திலேயே கைது செய்து செய்துள்ளது போன்றுள்ளது.

இவ்வாறு பாலிவுட் நடிகர் அனுபம் கெர் கூறினார்.

Leave a Reply