- செய்திகள், விளையாட்டு

`நடந்ததை மறப்போம், நடக்க இருப்பதை கவனிப்போம்'

 

ஹைதராபாத், ஏப். 20:-
நடந்து முடிந்தவைகளை மறந்து நடக்க இருப்பதில் கவனம் செலுத்துவோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வி கண்டுள்ளது. நேற்று முன்தினம் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சௌதீ,  கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. அத்தோடு ஐபிஎல் போட்டியில் இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கின்றன. ஆகையால் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், இனி வரும் போட்டிகளில் கவனம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.

தங்களது அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர் என்றும் விரைவில் தங்கள் அணி மீண்டெழுந்து திறமையை நிரூபிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஹைதராபாத் அணியின் ஆட்டத்தைப் பாராட்டிய சௌதீ அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் ஆட்டத்தையும் பாராட்ட தவறவில்லை. அந்தப் போட்டியில் வார்னர் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply