- செய்திகள், விளையாட்டு

தோல்வியில் இருந்து மீளுமா கிங்ஸ்லெவன் பஞ்சாப்?

புதுடெல்லி, ஏப். 15:-

புதுடெல்லி பெரஷோகோட்லா மைதானத்தில் இன்று நடக்கும்  ஐ.பி.எல்.. கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் மில்லர் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

டேர்டெவில்ஸ் அணி வெற்றியோடு தொடக்க முதல் போட்டியில்  முயன்றது. ஆனால், பேட்ஸ்மன்களின் ‘சொதப்பலான’ ஆட்டத்தில் 98 ரன்களில் சுருண்டு கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது.  குயின்டன் டீக்(17), சஞ்சு சாம்சன்(15) தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் ஏமாற்றினர்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிராத் வெய்ட், அதிகவிலைக்கு (ரூ.8.5 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட பவன் நெகி சோபிக்கவில்லை.பந்துவீச்சிலும் கவுன்டர் நீல், மோரிஸ், அமித்மிஸ்ரா, ஜாகீர்கான் ஆகியோரும் முத்திரைபதிக்கவில்லை. முதல் வெற்றிக்காக, அனைத்து துறைகளிலும் டெல்லி அணி இன்று ஜொலிப்பது அவசியமாகும்.

அதேபோல, மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியபோதிலும் வெற்றி கைநழுவியது.  முரளி விஜய், மணன் வோரா, தினேஷ் கார்த்திக், பின்ஞ், ஸ்டோனிஸ் ஆகியோர் அதிரடியாக பேட் செய்ததால் 161 ரன்கள் சேர்த்தது. கடந்த போட்டியில் மேக்ஸ்வெல், மில்லர் ஏமாற்றம் அளித்தபோதிலும் இந்தபோட்டியில் எழுச்சி பெறலாம்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஜான்சன், மோகித் சர்மா, சந்தீப் சர்மா,அக்சர் படேல், ஸ்டோனிஸ், பிரதிப் சாகு என வேப்பந்து, சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் கூட்டணி இருப்பது ஆறுதலாகும்.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply