- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

தோனி 4-வதாக களம் இறங்க வேண்டும்-சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் 4-வது ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 4-வது ஆட்டக்காரராக களம் இறங்கிய தோனி 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி என விளாசி இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இந்த நிலையில் தோனி 4-வது ஆட்டக்காரராக களம் இறங்கினால் இந்தியாவுக்கு நல்லது என்றும்  2015-ம் ஆண்டு உலக கோப்பை முதல் இதை சொல்லி வருவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்திய அணிக்கு கேப்டனாக பதவி வகிக்க வேண்டும் என்றும் சேவாக் குறிப்பிட்டார்.

Leave a Reply