- செய்திகள், விளையாட்டு

தோனிக்கு தசைப்பிடிப்பு பார்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு?

டாக்கா, பிப்.23:-
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதுகுப் புறத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணிக்கு பார்திவ் படேல் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது தோனிக்கு முதுகுப் புறத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்திவ் படேல் அழைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் டாக்கா சென்று இந்திய அணியுடன் சேர்ந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத் அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பரான பார்தி படேல் சமீபத்தில் முடிவடைந்த விஜய் ஹசாரே மற்றும் தியோதார் டிராபி போட்டிகளில் சதம் அடித்துள்ளார். படேல் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக இந்திய அணியில் பங்கேற்று விளையாடினார். சமீபத்தில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

Leave a Reply