- உலகச்செய்திகள், செய்திகள்

தொலை உணர்வு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

 

பெய்ஜிங், மே 16:-

நிலப் பரப்பை அளவிடுதல் மற்றும் பேரிடம் ேமலாண்மை ஆகியவற்றுக்கான பிரத்யேக  தொலை உணர்வு செயற்கைக்கோளை லாங்மார்ச் 2டி ராக்கெட் மூலம் சீனா நேற்று விண்ணில் செலுத்தியது.

யோகான்-30 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள், சீனாவின் வடமேற்கில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங்மார்ச் 2டி ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது.

சீனா செலுத்திய லாங்மார்ச் 2டி ராக்கெட் அந்நாடு விண்ணில் ஏவிய 227 ராக்கெட்டாகும். மேலும், கடந்த 2006-ம் ஆண்டு யோகன்-1 என்ற செயற்கைக்கோளை செலுத்தத் தொடங்கி, தற்போது 30-வது செயற்கைக்கோளை சீனா செலுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகள், நிலபரப்பு அளவீடு, பயிர்களின் விளைச்சலை மதிப்பிடுதல், பேரிடர் நிவாரண உதவி ஆகியவற்றுக்கு
இந்த செயற்கைக்கோள் பயன்படும் என்று ஜின்குவா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply