- செய்திகள், மாநிலச்செய்திகள், வணிகம்

தொடர்ந்து 4 வாரங்களாக காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 26:-

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் தொடர்ந்து கடந்த 4 வாரங்களாக வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்ற வாரத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 112 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

ஹோலி, புனித வெள்ளியை முன்னிட்டு கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை  பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை  என்பதால் சென்ற வாரத்தில் 3 நாட்கள்  மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம் பங்குகளில் முதலீடு செய்து வருவது. ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற நம்பிக்கை போன்ற காரணங்களால் சென்ற வாரத்தில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.
நிப்டி கணக்கிட உதவும் 50 நிறுவனங்களில் போஷ், டாட்டா பவர், வேதாந்தா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்பட பல நிறுவனங்களின் விலை உயர்ந்தது. அதே வேளையில், டெக் மகிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் உள்பட பல நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட், வாகனம், பொறியியல் சாதனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் குறியீட்டு எண்கள் ஏற்றம் கண்டன.

சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.54 சதவீதம் அதிகரித்து 25,337.56 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.47 சதவீதம் உயர்ந்து 7,716.50 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply