- செய்திகள், வணிகம்

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி

புதுடெல்லி, பிப்.4:-
தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 316 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 94 புள்ளிகள் குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ெணய்
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் 30 டாலருக்குக்கும் கீழ் சென்றது. இது உலக பங்குச் சந்தைகளை பதம் பார்த்தது. இதன் தாக்கம் நம் நாட்டு பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
கடந்த பணக்கொள்கை ஆய்வறிக்கையில் ரிசர்வ் வங்கி இந்த நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை எந்த மாற்றமும் இன்றி 7.4 சதவீதமாக வைத்துள்ளது. இது உலக வங்கியின் மதிப்பீடான 7.3 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். கடந்த ஜனவரி மாதத்தில் சேவைகள் துறை நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் இது போன்ற சாதகமான அம்சங்களால் பங்குச் சந்தைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.
உலோகம்
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட், மின்சாரம், ரியல் எஸ்டேட், உலோகம், நுகர்வோர் சாதனம், பொறியியல் சாதனம், வங்கி, வாகனம், தொலைத்தொடர்பு உள்பட அனைத்து துறைகளின் குறியீட்டு எண்களும் இறங்கின.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், இந்துஸ்தான் யூனிலீவர், டி.சி.எஸ்., சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை மட்டும் ஏற்றம் கண்டது. பி.எச்.இ.எல்., என்.டி.பி.சி., டாட்டா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் வங்கி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
நிப்டி
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 315.68 புள்ளிகள் இறங்கி 24,223.32 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 93.75 புள்ளிகள் குறைந்து 7,361.80 புள்ளிகளில் நிலை கொண்டது.

Leave a Reply