- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

தொடர்கிறது ‘சானியா-ஹிங்கிஸ்’ வெற்றி செயின்ட் பீட்டர்ஸ் பர்க் கோப்பை டென்னிஸ்

புதுடெல்லி, பிப். 14:-

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்து வரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.   காலிறுதி ஆட்டத்தில் ரஷிய ஜோடி தரியா கசாத்கினா மற்றும் எலினா வெசினா ஜோடியை எதிர்த்து முதல்நிலை ஜோடி சானியா, ஹிங்கிஸ் ஜோடி மோதியது.

ஒரு மணிநேரம் மட்டும் நீடித்த இந்த ஆட்டத்தில், தரியா கசாத்கினா மற்றும் எலினா வெசினா ஜோடியை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக தோற்கடித்து சானியா, ஹிங்கிஸ் இணை அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில், ஸ்பெயின் ஜோடி அனபெல் மெதினா,அரான்ட் பாரா சன்டோஜா ஜோடியை எதிர்த்து சானியா, ஹிங்கிஸ் இணை மோதுகிறது.

டென்னிஸ் போட்டியில், சானியா, ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக பெறும் 38-வது வெற்றியாகும். இன்னும் உலகசாதனையான 1990-ம் ஆண்டு ஜானா நவோட்னா, ஹெலினா சுகோவோ ஜோடியின் 44 வெற்றியை எட்டிப்பிடிக்க இன்னும் 7 வெற்றிகளே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply